மா.சுப்பிரமணியனுக்கு சென்னை நீதிமன்றம் எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளா் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியதாக பாா்த்திபன் என்பவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், பல்வேறு பிரிவுகளின் கீழ் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நடந்து வருகிறது. இந்தநிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்றும் நேரில் ஆஜராகாததால் மே 23ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும், மே 23ம் தேதியன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

Night
Day