தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறை உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்து சவரன் 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் காலை 125 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலை கூடுதலாக 75 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்த தங்கம் விலை, மாலை மேலும் 600 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்துக்கு 800-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் வெள்ளி கிராம் 3 ரூபாய் உயர்ந்து 111 ரூபாய்க்கும் கிலோ 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு  லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day