மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பேராசிரியரை தாக்கிய சக மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சேரன்மகாதேவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படும் பேராசிரியரை தாக்கிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கேரளாவின் மூணாறு பகுதிக்கு இண்டஸ்ட்ரியல் விசிட்' சென்றதாக  கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது உடன் சென்ற பேராசிரியர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சக மாணவர்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பேராசிரியர் மீது 4 மாணவர்களுக்கும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Night
Day