கார் மற்றும் பைக்குகள் மீது மது போதை இளைஞர்கள் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை மது போதையில் இருந்த இளைஞர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையில் உள்ள அண்ணா நகர் வண்டியூர், சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மது போதையில் இருந்த இளைஞர்கள் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். அப்போது அடாவடி செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, சாலையில் சென்ற பொதுமக்களையும் மிரட்டினர். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஹம்சாத் ஹுசைன், மருதுபாண்டி, லட்சுமணன், அருண் ஆகியோரை கைது செய்த நிலையில், தப்பியோடிய 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Night
Day