எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணாநகரில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டதிமுக நிர்வாகி தனசேரனின் பேரன் சந்துரு போலீசாரிடம் பொய்யான வாக்குமூலம் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர், கடந்த 28ம் தேதி இரவு அண்ணாநகர் பகுதியில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை இயக்கிய நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலில் விபத்து காரணமாக மாணவர் உயிரிழந்தாக ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் நடந்த விசாரணையில் முன்விரோதம் காரணமாக நித்தின் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே. நகர் தனசேகரனின் பேரன் சந்துரு தலைமறைவானார். அவரை கைது செய்யக்கோரி உயிரிழந்த மாணவர் நித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இ ந் நிலையில்தலைமறைவாக இருந்த சந்துருவை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விசாரணையில் காவல்துறையிடம் சந்துரு பொய்யான வாக்குமூலத்தை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காரை தான் ஓட்டவில்லை என்றும் முன் இருக்கையில் தான் அமர்ந்திருந்ததாக தவறான தகவல் அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வழக்கை திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் நித்தினின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் சந்துரு கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நித்தின் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உடல் ஒப்படைக்கப்பட்டது.