நியாய விலைக்கடையில் முண்டியடித்த மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே ரேஷன் கடையில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்து முண்டியடித்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  போஸ் நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு கீழ 2-ஆம் வீதியில் உள்ள அர்பன் கூட்டுறவு பண்டகசாலை பின்புறம் உள்ள ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவது வழக்கம். இங்கு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலையிலேயே 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். காலை 9 மணிக்கு திறக்க வேண்டிய கடை தாமதமாக திறக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு சில மூதாட்டிகள் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் இந்த ரேஷன் கடை அமைச்சர் ரகுபதி வீட்டின் அருகே இருப்பதால் இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

varient
Night
Day