விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.எஃப் 16

எழுத்தின் அளவு: அ+ அ-

பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக GSLV F16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இணைந்து நிசார் செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து GSLV F16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியில் இருந்து 747 கிலோமீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிசார் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

ஆயிரத்து 805 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளில், நாசா ஆயிரத்து 016 கோடி ரூபாயும், இஸ்ரோ 788 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளது. 2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகும். 

உலகிலேயே முதல்முறையாக நாசாவின் L Band, இஸ்ரோவின் S Band என இரட்டை அலைவரிசை ரேடார்களுடன் நிசார் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 12 நாட்களுக்கு ஒரு முறை உயர்தெளிவுத்திறன் கொண்ட பூமியின் தரவுகளை வழங்கும் நிசார் செயற்கைக் கோள், 97 நிமிடங்களில் புவியை ஒருமுறை சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Night
Day