ஆக.2 முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேக‌ மாறுபாடு காரணமாக வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும், ஆகஸ்ட் 3ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Night
Day