மதுபோதையில் பெண் மீது தாக்குதல் - அதிர்ச்சிக் காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த நபரை வழி விடுமாறு கூறிய போது  போதை ஆசாமி பெண்ணை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வி.ஆர். பிள்ளை தெருவை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டின் முன் போதை ஆசாமி அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவர் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியதோடு தாக்கியும் உள்ளார். பெண்ணின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போதை ஆசாமியிடமிருந்து பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Night
Day