பேருந்துக்காக காத்திருந்த நகை வியாபாரி கடத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நகை வியாபாரியை கடத்தி 31 லட்சம் ரொக்கம் 16 சவரன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சொந்தவூரில் நகை வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் சென்னையில் நகைகளை கொள்முதல் செய்து விட்டு எழும்பூரில் தனியார் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது ரவிசந்திரனை மர்மநபர்கள் 3 பேர் வலுகட்டாயமாக காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் அவரிடம் இருந்த நகை, பணம் அனைத்தையும் பறித்து விட்டு போரூர் அருகே இறக்கி விட்டு தப்பினர். இதுகுறித்து திருவல்லிக்கேணி துணை ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு 3 பேரை தேடி வருகின்றனர். 

Night
Day