மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்த கவுன்சிலர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் மக்கள் பிரச்னையை பேச வேண்டிய கவுன்சிலர்கள், செல்போனில் ரீல்ஸ் பார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மொத்தம் 200 உறுப்பினர்கள் உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் வெறும் 40 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்காததால் இருக்கைகள் அனைத்தும் காலியாக காணப்பட்டது. அவ்வாறு கலந்த கொண்ட கவுன்சிலர்களும், மக்களின் பிரச்னைகளை குறித்து பேசாமல், செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து மக்களின் பிரச்னைகளை பேச மாமன்றத்திற்கு அனுப்பி வைத்தால், கவுன்சிலர்கள் கடமைக்கு என வந்து செல்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Night
Day