பணம் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் சேர்த்த திமுக

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்தபோது திமுக ஊராட்சி மன்ற தலைவர் வேலு பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பெருமங்கலம் கிராமத்தில் விளம்பர திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுமக்களை காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. அப்போது டோக்கனை கையில் வைத்து கொண்டு பணத்தை பெற ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்ட போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஊராட்சி மன்ற தலைவர் வேலூ அங்கிருந்து எஸ்கேப் ஆனார். பணம் தராவிட்டால் ஓட்டு போட மாட்டேன் என மூதாட்டி மிரட்டிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Night
Day