பெண் போலீசார் முன்பே ஆபாச பேச்சு...

எழுத்தின் அளவு: அ+ அ-

தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை ஆபாசமாக திட்டிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனது அம்மாவுடன் புகார் கொடுக்க வந்திருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் இளம் பெண்ணை தடுத்து நிறுத்தி எதற்காக இங்கு வந்தாய் என கேள்வி எழுப்பினார். மேலும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி பெண்ணுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். பெண் காவலர்கள் முன்னிலையில், மதுபோதையில் இளம்பெண்ணை திட்டியதால், கோபமடைந்த அவர்கள், எப்படி அசிங்கமாக பேசுவாய் என கேள்வி கேட்டு வீடியோ எடுத்தனர். இதுதொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில், ரகளையில் ஈடுபட்ட நபர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Night
Day