புறா வளர்ப்பது தொடர்பாக ஒருவர் கொலை - 6 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புறா வளர்ப்பது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இடையன்குளத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரின் செங்கல்சூளையில் பணிபுரிந்த முருகதாஸ் குடும்பத்தினர் அங்கிருந்து மற்றொரு செங்கல்சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 11-ஆம் தேதி ஞானசேகரின் செங்கல்சூளையில் தாங்கள் வளர்த்த புறாக்களை கேட்டு அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் முருகதாசின் மகன் மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஞானசேகரை கொலை செய்தார். இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய மணிகண்டன், நாகராஜ், பேச்சிமுத்து மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஹரிச்சந்திரன், முருகதாஸ், முத்துப்பாண்டி ஆகிய 6 பேரை இன்று கைது செய்தனர்.

Night
Day