தென்காசி : பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செல்லபிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்த சிவமுருகன் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் வீடியோ காலில் பேசி, பின்னர் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆழ்வார் குறிச்சி போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.

varient
Night
Day