தேனி : கணவனை கட்டையால் அடித்து கொலை - மனைவி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி அருகே மதுபோதையில் தொந்தரவு செய்த கணவனை, மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடிநாயக்கனூரில் மோகன் - கார்த்திகா தம்பதியினர் வசித்து வந்தனர். மோகன் தினந்தோறும் மது அருந்திவிட்டு, மனைவி கார்த்திகாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மோகன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கார்த்திகா அருகில் இருந்த கட்டையால், கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day