எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து பணத்தை அபகரித்து வந்த பிரபல கொள்ளையனை கர்நாடகா மாநிலத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் மூவேந்தர் நகரைச் சேர்ந்த சேகர் மனைவி தமிழ்செல்வி கடந்த ஜூலை மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். அப்போது பணம் வராததால் அங்கிருந்த நபர் ஒருவர் பணம் எடுத்துத் தருவது போல் நடித்து தமிழ்செல்வியின் ஏடிஎம் கார்டை எடுத்துக் கொண்டு வேறொரு எடிஎம் கார்டைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அன்று இரவு முடிச்சூர் ஏடிஎம்மில் நான்கு முறை பத்தாயிரம் ரூபாய் எடுத்ததும் மறுநாள் காலை ஆவடி ஏடிஎம்மில் நாற்பதாயிரம் எடுக்க முயன்றதும் தமிழ்செல்விக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் எடிஎம் மையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் திம்மா ராயப்பா என்பது தெரியவந்தது.
தொடர்ந்து பெங்களூரு சென்ற தனிப்பட்டை போலீசார் திம்ம ராயப்பாவை கைது செய்தனர்.