க்ரைம்
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.50 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம்..!...
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்த?...
புதுச்சேரி அருகே அடுத்தடுத்து மூன்று கடைகளின் ஷட்டரை உடைத்து மர்ம நபர் ஒன்றரை லட்சம் ரூபாயை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. வில்லியனூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கும் தேனீர் மற்றும் ஸ்னாக்ஸ் கடையை நடத்தி வரும் சேகர் என்பவர், இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு காலையில் வந்து பார்த்துள்ளார். அப்போது டீக்கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு 18 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுது தூரத்தில் உள்ள பேக்கரி மற்றும் மருந்தகத்தின் ஷட்டரை உடைத்தும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து மர்ம நபர், யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்த?...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...