சேலம்: ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்‍கு முக்‍கியத்துவம் கொடுக்‍கும் அதிகாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மேற்கு வட்டாரப் போக்‍குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்‍கு முக்‍கியத்துவம் கொடுக்‍கும் வகையில், பதிவு செய்ய வரும் பொதுமக்‍களை அதிகாரிகள் புறக்‍கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கந்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன பதிவு, லைசென்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்‍களை கணினியில் சர்வர் பிரச்சனை இருப்பதாகக்‍ கூறி ஆர்.டி.ஓ. அதிகாரிகள் அலைகழிப்பதாக கூறப்படுகிறது. தனிநபர் ஒரு விண்ணப்பத்தை கொடுத்தால் பதில் தராத அதிகாரிகள், இடைத்தரகர்கள் தரும் படிவங்களை உடனடியாக சரி பார்த்து தருவதாக ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வரும் மக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர்.

varient
Night
Day