இன்று முதல் டீ, காஃபி விலை உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இன்று முதல் டீ, காஃபியின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது டீ, காஃபி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒரு டீ 10 ரூபாய் மற்றும் 12 ரூபாய்க்கும், காஃபி 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் டீ, காஃபியின் விலையை உயர்த்த டீ கடை வியாபாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் டீ 15 ரூபாயாகவும், காஃபி 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால் விலை, டீ  தூள், காஃபி தூள் ஆகியவற்றின் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, கடைகளுக்கான வரி உயர்வு ஆகியவை காரணமாக விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் டீ, காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day