புதுச்சேரி : போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 


பாகூர் அன்பரசன் நகர் பங்களா வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் கடந்த 4 நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் மது அருந்தியபடியே இருந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்த அனைவரும் உறங்கச் சென்ற பிறகு இவர் வீட்டிற்கு வெளிய இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day