மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் சீன பூண்டுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவிலிருந்து மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் பூண்டுகள் கடத்தப்பட்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது, இந்தியர்களின் உடல்நலனுக்கு புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டில் அபாயகரமான ரசாயனங்கள் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் வெளியானதை அடுத்து, 2014-ம் ஆண்டு சீன பூண்டுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டன. இருப்பினும் சீன பூண்டுகள் வடகிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூடான் வழியாக இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. சீன பூண்டுகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

Night
Day