புதுச்சேரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 

மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஜெரால்டு என்பவரின் மனைவி ஏஞ்சலின் நிர்மலா மேரி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஏஞ்சலின் நிர்மலாவின் வாகனத்தை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சமயபுரத்தில் பதுங்கியிருந்த ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Night
Day