பிரியாணி கடையில் மிரட்டி பணம் பறிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த தாம்பரத்தில் கடையில் பிரியாணி வாங்கிவிட்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

ரங்கனாதபுரம் பகுதியை சேர்ந்த மஸ்தான் என்பவர் காந்தி சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பிரியாணி பார்சல் வாங்கிய இருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புலிகொரடூர் பகுதியில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் கடப்பேரியை சேர்ந்த சச்சின், மதன் என்பதும் பிரியாணி கடையில் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்த 2 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

varient
Night
Day