பால்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் அதிரடி சோதனை - 95 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் 60 லட்ச ரூபாய் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 95 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் 60 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

அகமதாபாத்தில் பால்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 90 கோடி ரூபாய் மதிப்புள்ள 95 புள்ளி 5 கிலோ கிராம் தங்கமும், 60 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

குற்றம்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் மேக் ஷா மற்றும் அவரது தந்தை மகேந்திர ஷா ஆகியோர் கடத்தல் தங்கம் மற்றும் பணத்தை மறைத்து வைத்திருந்ததாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை உதவி ஆணையர் எஸ்.எல்.சௌத்ரி தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பங்குச் சந்தை வர்த்தகம், பந்தயம் கட்டுதல் மற்றும் தங்கக் கடத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுபவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Night
Day