பட்டப்பகலில் இளைஞர் குத்திக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டையை அடுத்த சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பெயிண்டரான இவர், இன்று விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள தனியார் பார் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தினேஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தினேஷை கொலை செய்தது யார், முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day