படிக்க வைப்பதாக கூறி ஏமாற்றினர் - பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீர் பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநருங்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஏஜென்ட் மூலம், சென்னை திருவான்மியூரில் உள்ள திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், ஆன்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பட்டியலின சிறுமியிடம் வன்மத்துடன் இருந்த திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மர்லினா, சிறுமி மீது சூடு வைப்பது, கத்தியை கொண்டு வெட்டுவது என பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்துடிஜிபியிடம் சிறுமி அளித்துள்ள புகார் மனுவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

varient
Night
Day