நெல்லை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் - கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென் மாவட்டங்களில் கூலிப்படையோடு போலீசார் இணைந்து செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் குற்றச்சாட்டியுள்ளார். பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டியல் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் குடும்பத்தினர் அலுவலகத்தை சூறையாடினார். இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மாநில செய்றகுழு உறுப்பினர் கனகராஜ், அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

varient
Night
Day