நீலகிரி : பள்ளி மேலாண்மைக் குழுவினரை தாக்கிய தி.மு.க வினரை கைது செய்ய வேண்டும் : பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி அருகே பள்ளி மேலாண்மைக் குழுவினரை தாக்கிய தி.மு.க வினரை கைது செய்ய கோரி மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

தேவாலா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், பொது மக்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் இராஜாமணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாகத் துண்டறிக்கைகள் வழங்கி, விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த தி.மு.க. வார்டு கவுன்சிலர் ஆலன் உள்ளிட்ட தி.மு.க.வினர், மேலாண்மைக் குழுவினரை தாக்கியதாக கூறப்படுகிறது.  தாக்குதல் நடத்திய திமுகவினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் தேவாலா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

Night
Day