நிலப் பிரச்சனை : நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த லஞ்சம் - பெண் தாசில்தார், காவலர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நில பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். 


பொன். தங்கவேல் என்ற சமூக ஆர்வலர், தனது பகுதியில் உள்ள அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஆக்கிரமிப்பை அகற்ற அடையாறு மண்டல அலுவலத்தில் தாசில்தார் சரோஜா, 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினரை அணுகிய பொன். தங்கவேல், அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய நோட்டுகளை சரோஜா கூறிய காவலரிடம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து சரோஜாவின் கணவரான ஆயூதப்படை காவலர் பிரவீன் பணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து, சரோஜாவையும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட காவலரையும் கைது செய்தனர்.

Night
Day