தேவர் திருமகனாருக்கு பிரதமர் மோடி மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி பிரதமர் மோடி மனமார்ந்த அஞ்சலி செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் சமூகம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகாரின் புனிதமான குரு பூஜையின்போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார் என புகழாரம் சூட்டி உள்ளார்.

Night
Day