பசும்பொன்னில் தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

எழுத்தின் அளவு: அ+ அ-



ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பெருமைமிகு விழாவில் பங்கேற்பதற்காக பசும்பொன் கிராமத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ஆர்ச் பகுதியில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். சின்னம்மாவின் வாகனம் முன்பாக இளைஞர்கள் சிலம்பம் ஆடி புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து இளைஞர்கள் சின்னம்மாவின் வாகனம் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் கிராமமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு 'வீரமங்கை வேலுநாச்சியார் சின்னம்மா வாழ்க' என உற்சாகமுடன் முழக்கமிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர். தொடர்ந்து சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் நினைவிடத்தில் மாலை வைத்தும் மரியாதை செலுத்தினார். பின்னர் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். 


varient
Night
Day