அரசுப் பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

A8 என்ற அரசு பேருந்து வடரங்கம் கிராமத்திலிருந்து சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பணகாட்டாங்குடி அருகே சென்றபோது பேருந்தின் வலதுபுற முன் சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைக்கண்ட ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.  

Night
Day