நிலத்தை அபகரிக்க திமுக கவுன்சிலர் முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அம்பத்தூரில் இரவோடு இரவாக குடியிருப்பு சங்கத்துக்கு சொந்தமான இடத்தை திமுக கவுன்சிலர் அபகரிக்க முயன்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

அம்பத்தூரில் டிஎன்இபி காலனி குடியிருப்போர் நல சங்கத்திற்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்து 100 சதுர அடி இடத்தை சுற்றிலும் வேலி அமைப்பதற்காக கற்கள் நட்டு வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 82வது வார்டு திமுக கவுன்சிலர் ரமேஷ் என்ற நீலகண்டன் இரவோடு இரவாக டிஎன்இபி குடியிருப்போர் நல சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டிருந்த கற்களை உடைத்து அபகரிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு மக்கள் திமுக கவுன்சிலரை முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். 
திமுக கவுன்சிலர் ரமேஷ் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு-க்கு நெருங்கியவர் என்பதால் தங்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Night
Day