குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவேங்கட உடையான்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் ஆகிய 3 சிறுவர்களும் பள்ளிக்கு சென்று விட்டு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் கிராம மக்களுடன் இணைந்து சிறுவர்களை தேடியுள்ளனர். அப்போது மருதக்குடி பிள்ளையார் கோயில் குளத்தில் சிறுவர்கள் குளிக்கச் சென்றதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்த போது 3 சிறுவர்களும் மிதந்து கிடந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாக அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day