நிகிதா மீது பணமோசடி வழக்கு நிலுவையில் உள்ளது

எழுத்தின் அளவு: அ+ அ-

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் மீது புகாரளித்த நிகிதா என்ற பெண் மீது பணமோசடி வழக்கு ஒன்று ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காரில் வைத்திருந்த  தங்க செயின் காணாமல் போனதாக நிகிதா அளித்த புகாரின் பேரில்தான் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், கோசாலையில் வைத்து காவலர்கள்  தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தாயருடன் நிகிதா வீடியோ வெளியிட்டுள்ள நிலையில்,  நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் வந்துள்ளது.

Night
Day