நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, குடும்பத் தகராறில் ஏர் கன்னால் சுட்டதில் புதுமணப் பெண் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர்.

வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கு லாவண்யா என்று பெண்ணுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாட்களில் இருந்து தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த தென்னரசு, தான் வைத்திருந்த ஏர் கன்-னால் தனது மனைவி லாவண்யாவை சுட்டுள்ளார். தடுக்க முயன்ற தென்னரசுவின் தாய் பச்சையம்மாள், இளைஞர் கார்த்தி ஆகியோரையும் ஏர் கன்னால் சுட்டுள்ளார். படுகாயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தென்னரசுவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தனது வீட்டிலேயே தென்னரசு ரகசியமாக ஏர் கன்னை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரிடமிருந்த 3 ஏர் கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Night
Day