நடுரோட்டில் ஆடைகளை கிழித்து மானபங்க படுத்தியதால் இளம்பெண் கண்ணீருடன் வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் ஆட்டோவில் சென்ற பெண்ணை வழிமறித்து ஆடையை கிழித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை கேடிசி நகர் சோதனைசாவடி அருகே ஆட்டோவில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த சிலர் ஆடைகளை கிழித்து  தாக்குதலில்  ஈடுபட்டனர். அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து விசாரித்த போது, அவர் தூத்துக்குடி சவேரியார் புரம் கிறிஸ்டிலா பென்சியா என்பதும், முனியசாமி என்பவரிடம் 4 லட்சம் ரூபாய்  கடனாக பெற்றுதுடன் அதற்காக மாதம் 10 சதவீதம் வட்டி செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் கடன் தொகையை விரைந்து தரக்கோரி கடன் கொடுத்தவர் அழுத்தம் கொடுத்ததால்  கிறிஸ்டிலா பென்சியா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முனியசாமி தாக்குதல் நடத்தியதாக கூறினார்.

Night
Day