ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை மூட உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், ஆலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்லும்போது, 

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் ஆலைகளை மூடி விட்டு சென்றுவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்த வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தையும், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரையும் சேர்க்கவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. 

Night
Day