சுனாமி குடியிருப்பு வீட்டிற்கு ரூ.67,000 மின் கட்டணம் - தர்ணா

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே 67 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக செலுத்த வலியுறுத்தி மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து, குடும்பத்துடன் மீனவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

வேதாளையில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷேக் ஜமாலுதீன். வழக்கமாக தனது வீட்டுக்கு மின்சார கட்டணமாக 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் கட்டணமாக 67 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி மின்சார வாரியத்திடம் இருந்து அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜமாலுதீன் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், 2 நாட்களில் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், அவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day