நகை கடை உடைத்து 15 கிலோ வெள்ளி கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரபல நகை கடையின் ஷட்டரை உடைத்து 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெருமாள் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நகைகடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றபோது, லாக்கரின் பூட்டு உடைக்கப்பட்டு 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஆரணி கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day