திருப்பூரில் தாய்சேய் நல மருத்துவமனையில் காலாவதியான குளுக்கோஸ் - 2 பேர் பணியிட மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அவிநாசி சாலை உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் விநியோகம் செய்த விகாரத்தில் ஒருவர் பணியிடை நீக்கம், 2 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 பங்களா ஸ்டாப் பகுதியில் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு சென்று  5 மாத கர்ப்பிணி பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட்கள் வழங்கி உள்ளனர். அதில் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பானுமதி கேட்டபோது, ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மாநகராட்சி உதவி நல அலுவலர் மருத்துவமனைக்கு மேற்கொண்ட ஆய்வில் காலாவதியான பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.  பின்னர்  ஆய்வக நுட்பனர் நாகஜோதியை பணியிடை நீக்கம் செய்து, மருந்தாளுனர் வீர பராசக்தி, செவிலியர் கோமதி உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். 

Night
Day