சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்காமல் பறந்த பள்ளியின் மேற்கூரை

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல்  தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின்  மேற்கூரை தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் அடுத்துள்ள தேவாலா பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  நேற்று நள்ளிரவு தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை சிமெண்ட் மேற்கூரை 150 அடி தூரத்திற்கு வீசப்பட்டது. பள்ளிக்கு இன்று விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.  சூறைக்காற்றுக்கு பள்ளியின் சிமெண்ட் மேற் கூரை சேதமடைந்துள்ளதால் உடனடியாக பள்ளி முழுவதும் உள்ள மேற்கூரைகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Night
Day