க்ரைம்
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்பு
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
தேனி அருகே சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை போட்டியில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். வடுகபட்டியை சேர்ந்த முருகன், பிரபு ஆகியோர், பின்னத்தேவன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் அருகே உரிமம் பெற்று பார் நடத்தி வந்துள்ளனர். அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் இரண்டு பேரும் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே, அல்லிநகரம் என்ற இடத்தில் பிரபு சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், முருகன் அளித்த புகாரின்பேரில் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக நினைத்து, வடுகபட்டியில் இருந்த பிரபுவை, முருகன் அரிவாளால் வெட்டி சாய்த்தார். இதில், படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...