க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடி அருகே சாலையோரத்தில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தையை மர்மநபர்கள் கடத்திச் சென்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. வேலுரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட சந்தியா என்ற இளம்பெண், தூத்துக்குடி அந்தோணியர் கோயில் அருகே தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையோரத்தில் தங்கி யாசகம் எடுத்து பிழைப்பை நடத்தி வருகிறார். வழக்கம்போல் சந்தியா தனது 4 மாத குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் சிலர் குழந்தையை கடத்தி சென்றதாக சந்தியா போலீசில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே குழந்தை ஒருவர் கடத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...