அருணாச்சல பிரதேசம்: உலகின் நீண்ட இருவழி சுரங்க சாலையை திறந்து வைத்த பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள உலகின் நீளமான இருவழி சுரங்க சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 825 கோடி ரூபாய் செலவில் கடல் மட்டத்தில் இருந்து 13ஆயிரம் அடி உயரத்தில் இந்த சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீண்ட இருவழி சுரங்கச் சாலை திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இது ராணுவத்துக்கு பேருதவியாக இருக்கும் என தெரிகிறது. டாவாங் மற்றும் கமெங் மலைப்பகுதிக்கு கனரக ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் எடுத்துச்செல்ல இந்த சுரங்கச்சாலை பெருமளவில் சிக்கலை குறைக்கும் என தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சுரங்கச்சாலைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் இன்று திறந்து வைத்துள்ளார். 

Night
Day