20 ஆண்டுகளுக்கு பிறகு மொழியால் இணைந்த சகோதரர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் 20 ஆண்டுகளுக்குப் மும்மொழி கொள்கைக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தன. இதனால், ஒன்று சேர முடிவு செய்த இருவரும் 20 ஆண்டு பகையை மறந்து ஒன்றிணைய முடிவு செய்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதை எதிர்த்து ராஜ்தாக்கரே ஜூலை 5-ம் தேதி மும்பையில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். இப்பேரணியை இப்போது உத்தவ் தலைமையிலான சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து நடத்த முடிவு செய்தன.
 
அதன்படி மும்பை வோர்லி டோமில் நடைபெற்ற சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மற்றும் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளின் கூட்டுப் பேரணியில் பங்கேற்ற உத்தவ் தாக்கரே, பால் தாக்கரே இருவரும் மேடையில் அமைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதன் மூலம் மராத்தி மொழிக்காக இருபது ஆண்டு பகையை மறந்து இருவரும் ஒன்றிணைந்தது இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day