க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பலசரக்கு கடையில் மாமூல் கேட்டு ரௌடிகள் உரிமையாளரை தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. புதுப்பேட்டை பகுதியில் மகேஸ்வரன் என்பவர் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சிறுபுழல் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிராஜ், மணிகண்டன், நரேஷ் ஆகியோர் கொண்ட கும்பல் மாமூல் கேட்டு மிரட்டி, அடித்து கொலை மிரட்டல் விடுத்ததுள்ளனர். மேலும் அத்துமீறி கடைக்குள் நுழைந்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் பழனிராஜ் மணிகண்டன் நரேஷ் ஆகிய 3 பேர் மீதும் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...