பல்வீர்சிங் உட்பட 14 காவலர்கள் வரும் 28ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில், பற்களை பிடுங்கிய வழக்கில் தொடர்புடைய பல்வீர்சிங் உட்பட 14 காவலர்களும் வரும் 28ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களை பற்களை பிடுங்கி காவல்துறையினர் சித்திரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில்ம், இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்து, நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், பல்வீர் சிங் உட்பட 14 காவலர்களும் வரும் 28ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

varient
Night
Day