க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நள்ளிரவில் மர்ம நபர் கிணற்றில் பொருத்திய மின்கம்பிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ராயர்பாளையத்தைச் சேர்ந்த பாலமுருகன் தனது தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் பொருத்தியிருந்த மின்மோட்டாரின் மின் கம்பிகள் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ளது. இதுகுறித்து பல்லம் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதையடுத்து பாலமுருகன் தனது கிணற்றின் அருகே கண்காணிப்பு கேமராவை பொருத்தினார். இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மின்கம்பிகளை திருடிச் செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்ற விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...